sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை - செங்கை ரயில் பாதை திட்டம் என்னாச்சு? கடலோர போக்குவரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பு!

/

மாமல்லை - செங்கை ரயில் பாதை திட்டம் என்னாச்சு? கடலோர போக்குவரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பு!

மாமல்லை - செங்கை ரயில் பாதை திட்டம் என்னாச்சு? கடலோர போக்குவரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பு!

மாமல்லை - செங்கை ரயில் பாதை திட்டம் என்னாச்சு? கடலோர போக்குவரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பு!


ADDED : ஜூலை 05, 2024 12:43 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:தமிழக தலைநகர் சென்னை அருகில், சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா பகுதியாக மாமல்லபுரம் உள்ளது. இங்குள்ள பல்லவ கலைச்சிற்பங்களை காண வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இங்கு சாலை வழி போக்குவரத்து மட்டுமே உள்ளது. எனவே, ரயில் போக்குவரத்து அவசியம். இதுதொடர்பாக பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், சென்னை - கடலுார் இடையே, 180 கி.மீ., தொலைவிற்கு, கடலோர ரயில் பாதை அமைக்க முடிவெடுத்தது.

இத்திட்டத்திற்கு, கடந்த 2007ல் நிர்வாகம் ஒப்புதல் அளித்து, 523.50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்துவதாக, 2008 - 09ல் அறிவித்தது.

திட்ட கள ஆய்விற்காக, 6.66 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. புதிய பாதையால் ரயில் போக்குவரத்து ஏற்பட்டு, கடலோர பகுதிகள் விரைந்து வளர்ச்சியடையும் என, இப்பகுதியினர் எதிர்பார்த்தனர்.

சென்னையில் உள்ள பெருங்குடி மாடி ரயில் மேம்பால ரயில் பாதையிலிருந்து, கடலோர தட ரயில் பாதையை துவக்கி, மாமல்லபுரம் வழியாக, கடலுார் வரை அமைக்க நிர்வாகம் முடிவெடுத்தது.

வருவாய் கருதி, இப்பாதையில் சரக்கு ரயில் இயக்கவும் பரிசீலிக்கப்பட்டது. மாடி ரயில் மேம்பால பாதையில், சரக்கு ரயில் இயக்குவது சாத்தியமற்றதாக, ஆய்வில் தெரிந்தது.

இதையடுத்து, சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக மாமல்லபுரம், கடலுார் என ரயில் பாதை அமைக்க, பின்னர் முடிவானது.

இப்பாதைக்கு நிலம் கையகப்படுத்த, மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலையின் மேற்கில் 100 - 300 மீ.,க்குள் அளவிட்டு, கடந்த 2011ல் கற்கள் நடப்பட்டன.

அதேபோல், செங்கல்பட்டு - மாமல்லபுரம் பாதைக்கு, செங்கல்பட்டு சாலையின் மேற்கில் அளவிவிட்டு, கற்கள் நடப்பட்டன.

புதிய ரயில் பாதை திட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், நீண்டகாலமாக முன்னேற்றமின்றி கிடப்பில் இருந்தது. எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்களும், அதற்கு வலியுறுத்தாமல் மெத்தனமாக உள்ளனர். பாதையின் நீளம் மற்றும் அதிக நிதி காரணமாக, திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதாக கூறப்பட்டது.

பயணியர் தொடர்ந்து வலியுறுத்தியதால், திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்து, கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 50 கோடி ரூபாய் ஒதுக்கியது. பின், 25 கோடி ரூபாய் என நிதி குறைக்கப்பட்டதால், அதிருப்தி ஏற்பட்டது.

தொலைதுாரம் அமைக்கப்படும் நீளமான பாதைக்கே, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும். படிப்படியாக நிதி ஒதுக்க, கால அவகாசமும் தேவைப்படும்.

இத்தகைய காரணங்களால் தாமதமாகலாம். கடலோர ரயில் பாதையில் குறிப்பிட்ட பகுதியான செங்கல்பட்டு - மாமல்லபுரம் இடையே, 26 கி.மீ., குறுகிய நீளம் தான் உள்ளது. திட்ட துவக்கமாக, இப்பகுதிக்கு முதலில் பாதை அமைத்து, போக்குவரத்து துவக்கலாம்.

சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதை தடத்தில், செங்கல்பட்டு முக்கிய சந்திப்பாக உள்ளது.

மாமல்லபுரம் - செங்கல்பட்டு பாதை ஏற்பட்டால், தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகள், விழுப்புரம் வழியாக இணைக்கப்படும். வடஇந்திய பகுதிகள், காஞ்சிபுரம் வழியாக இணைக்கப்படும்.

குறுகிய ரயில் பாதை சாத்தியமே!

முந்தைய ரயில் பாதை தடத்தில், பிற பகுதிக்கு குறுகிய நீள பாதை அமைத்து, ரயில் போக்குவரத்து துவக்குவது சாத்தியமானது தான்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதிக்கு, ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறையில் இருந்த ரயில் போக்குவரத்து, பின் நிறுத்தப்பட்டது. பாதையும் அழிந்தது. மீண்டும் ரயில் போக்குவரத்து துவக்க, ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது.அதன்படி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் ரயில் பாதையில் உள்ள நீடாமங்கலம் பகுதியிலிருந்து, 11 கி.மீ., தொலைவிற்கு மட்டும் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டது.குறுகிய பாதை உருவானதால், தற்போது, மன்னார்குடியிலிருந்து சென்னை, கோயம்புத்துார், திருப்பதி, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி உள்ளிட்ட பகுதிகளுக்கு, ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதேபோன்று, செங்கல்பட்டு - மாமல்லபுரம்பாதை அமைந்தால், மாமல்லபுரத்திலிருந்து தொலைதுார ரயில்கள்; சென்னை - மாமல்லபுரம் இடையில் மின்சார ரயில்கள் இயக்கலாம்.



நிலையங்கள்

பெருமாளேரி, குழிப்பாந்தண்டலம், புலியூர், ஈகை, மங்கலம், ருத்திரகோடி (திருக்கழுக்குன்றம்), கீரப்பாக்கம், புல்லேரி, துஞ்சம், நென்மேலி, கீழவேடு, மேலேரிப்பாக்கம், ஆலப்பாக்கம், மேலமையூர்.








      Dinamalar
      Follow us