/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
படாளம் சாலையில் ஆக்கிரமிப்பு பறிமுதல் வாகன ஏலம் எப்போது?
/
படாளம் சாலையில் ஆக்கிரமிப்பு பறிமுதல் வாகன ஏலம் எப்போது?
படாளம் சாலையில் ஆக்கிரமிப்பு பறிமுதல் வாகன ஏலம் எப்போது?
படாளம் சாலையில் ஆக்கிரமிப்பு பறிமுதல் வாகன ஏலம் எப்போது?
ADDED : மே 30, 2024 08:26 PM

மதுராந்தகம்:படாளம் காவல் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பொது ஏலம் விட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, புக்கத்துறை- உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி சாலைகளில், விபத்துக்களில் சிக்கும் வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டு வரும் வாகனங்களை நிறுத்த, காவல் நிலைய வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கார், வேன், லாரி, டாடா ஏஸ் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள், சாலை ஓரம் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதே போன்று, கடந்த சில தினங்களுக்கு முன், மதுராந்தகம் பகுதியில் விபத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதேபோல், படாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் அசம்பாவிதம் ஏற்படும் முன், வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.