/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேட்டுக்குப்பம் குளம் சீரமைப்பது எப்போது?
/
மேட்டுக்குப்பம் குளம் சீரமைப்பது எப்போது?
ADDED : மே 04, 2024 10:43 PM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள குளம், 2009ம் ஆண்டு ஆழப்படுத்தி, பக்கவாட்டு சுவருடன் நீராதாரத்திற்கு மேம்படுத்தப்பட்டன.
இக்குளம் முறையான பராமரிப்பு இன்றி, குளம் முழுதும் ஆகாயத்தாமரை நிறைந்தும், கோரை புற்கள் வளர்ந்தும் காணப்படுகிறது.
மேலும், கரையோரங்களில் முள்செடிகள் வளர்ந்து, படித்துறைகள் சேதம் அடைந்துள்ளன.
இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கிராம மக்களின் பிற தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.