/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து அவரச சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
/
விபத்து அவரச சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விபத்து அவரச சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விபத்து அவரச சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மே 02, 2024 01:42 AM

செங்கல்பட்டு:சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இந்த சாலையில், செட்டிப்புண்ணியம், பாரேரி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி மீன் மார்க்கெட், ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி கூட்டுச்சாலை, காரணைப்புதுச்சேரி கூட்டுச்சாலை, வண்டலுார், ஓட்டேரி ஆகிய பகுதிகளில், சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.
இந்த பகுதிகளில் சாலையை பொதுமக்கள் கடக்கும்போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும் போதும், அசுர வேகத்தில் வரும் வாகனங்கள் மோதி காயமடைகின்றனர்.
அவ்வாறு விபத்துகளில் பலத்த காயமடைந்தவர்களை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர்.
விபத்து நடந்தவுடன் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல், பலர் இறக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
விபத்தில் சிக்குவோர் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்த முடிவானது.
அதன்படி, செங்கல்பட்டு -- தாம்பரம் இடையே, அவரச சிகிச்சை மையம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து, சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில், அவசர சிகிச்சை மையம் கட்ட, 10 சென்ட் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்தது.
பின், மேற்கண்ட பகுதியில், தேசிய கிராம சுகாதாரத் திட்டத்தில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் கட்ட, 2022ம் ஆண்டு, 4 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
அதே ஆண்டு, ஏப்., மாதம் பணிகள் துவங்கி, கடந்த ஆண்டு, ஏப்., மாதம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.
மையத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட, 20 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணியும் நிறைவு பெற்றுள்ளது.
ஆனாலும் திறக்கப்படாத இந்த மையத்தை, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

