/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பில் தனியார் நிறுவனம் சி.எம்.டி.ஏ., பணியாளர்களை விடுவிப்பது எப்போது?

ADDED : ஏப் 04, 2024 11:37 PM
சென்னை:வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை, அதற்காக நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஏற்றுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கு, 40 ஏக்கர் நிலத்தில், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், டிச., 30ல் திறக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, புனேவைச் சேர்ந்த பி.வி.ஜி., நிறுவனத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தேர்வு செய்தனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு பணியை ஏற்க, தனி நிறுவனத்தை துவக்க வேண்டும், வங்கி உத்தரவாதம் காட்ட வேண்டும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் பேருந்து நிலையம், டிச., 30ல் பயன்பாட்டுக்கு வந்தாலும், நிர்வாக நடைமுறைகள் முடியாததால், பி.வி.ஜி., நிறுவனம் முழு பொறுப்பை ஏற்கவில்லை.
இதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட, தற்காலிக ஏற்பாடாக சி.எம்.டி.ஏ., அலுவலர்கள், பணியாளர்கள் அனுப்பப்பட்டனர். ஷிப்ட் முறையில் சி.எம்.டி.ஏ., அலுவலர்கள், இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நிர்வாக நடைமுறைகள் முடிக்கப்பட்டதால், அடிப்படை வசதிகள் பராமரிப்பு பொறுப்பை முழுமையாக ஏற்க, பி.வி.ஜி., நிறுவனம் முன்வந்துள்ளது.
இதையடுத்து பேருந்து நிலையத்தை முழுமையாக அந்நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் நிறுவனம் பணி பொறுப்பை ஏற்ற நிலையில், சி.எம்.டி.ஏ., பணியாளர்கள் கிளாம்பாக்கம் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.