/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் இடத்தில் இயங்கும் அரசு பள்ளி அம்பாள் பெயர் வைக்க தயக்கம் ஏன்?
/
கோவில் இடத்தில் இயங்கும் அரசு பள்ளி அம்பாள் பெயர் வைக்க தயக்கம் ஏன்?
கோவில் இடத்தில் இயங்கும் அரசு பள்ளி அம்பாள் பெயர் வைக்க தயக்கம் ஏன்?
கோவில் இடத்தில் இயங்கும் அரசு பள்ளி அம்பாள் பெயர் வைக்க தயக்கம் ஏன்?
ADDED : மே 20, 2024 09:59 PM
திருக்கழுக்குன்றம்: ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இயங்கும் அரசு பெண்கள மேல்நிலைப் பள்ளிக்கு, திரிபுரசுந்தரி அம்மன் பெயர் சூட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் அமைந்துள்ள குன்றுகள், அதையொட்டிய பகுதிகள் புல எண் 459ல், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது.
பள்ளி கல்வித்துறை, இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை, கடந்த 1998ல் இரண்டாக பிரித்து, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அமைத்தது.
முந்தைய பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 5 ஏக்கர் இடம் வழங்கி, அங்கு பள்ளி துவக்கப்பட்டது.
அறநிலையத்துறை கோவில் இடத்தில், பள்ளி அமைக்கப்பட்டதால், பள்ளிக்கு வேதகிரீஸ்வரரின் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன் பெயர் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடம் வழங்கப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை, நீண்டகாலம் கடந்தும், தற்போது வரை, பள்ளிக்கு அம்பாள் பெயரை சூட்டவில்லை. அரசுப் பள்ளி, கல்லுாரி ஆகியவற்றுக்கு, நிலம் அல்லது பெரும்தொகை நன்கொடை அளித்தவர் பெயர் சூட்டுவது, அரசின் நடைமுறையில் உள்ளது.
அறநிலையத்துறை இடம், பள்ளிக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாள் பெயரை சூட்ட பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், கல்வித்துறை நிராகரிக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, திரிபுரசுந்தரி அம்மன் பெயரை சூட்டும் நிபந்தனையுடன் தான், 5 ஏக்கர் இடத்தை, அறநிலையத்துறைக்கு அளித்தது.
இதுபற்றி பலமுறை வலியுறுத்தியும், கல்வித்துறை அலட்சியப்படுத்துகிறது. பெயர் சூட்ட விரும்பாவிட்டால், பள்ளி இடத்திற்கான ஆண்டு குத்தகை கட்டணத்தை, கல்வித் துறையிடம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

