/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடு குறுக்கே ஓடியதால் விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
/
மாடு குறுக்கே ஓடியதால் விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
மாடு குறுக்கே ஓடியதால் விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
மாடு குறுக்கே ஓடியதால் விபத்து கணவன் கண்முன் மனைவி பலி
ADDED : ஜூலை 04, 2024 12:30 AM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, காரணை புதுச்சேரி விநாயகபுரம் பகுதியில் வசித்தவர் செல்வராஜ், 56.இவரது மனைவி விஜயா, 54. இருவரும், கட்டட தொழிலாளிகள்.
இருவரும், நேற்று காலை செங்கல்பட்டில் இருந்து ஊரப்பாக்கத்திற்கு, இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, சீனிவாச புரம் சிக்னல் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் மாடு குறுக்கே ஓடியதால், நிலை தடுமாறிய இருசக்கர வாகனம், முன்னால் சென்ற காரில் மோதியது.
அந்த விபத்தில்இருவரும் சாலையில் விழுந்தனர்.
இதில், விஜயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்.
அருகில் இருந்தோர், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டுஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விஜயாவின் உடலை மீட்டு, பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, கூடுவாஞ்சேரிபோக்குவரத்துபுலனாய்வு போலீசார்விசாரிக்கின்றனர்.