/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடப்பாக்கத்தில் அமையுமா?
/
தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடப்பாக்கத்தில் அமையுமா?
ADDED : மார் 13, 2025 10:42 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சியில், 21 வார்டுகள் உள்ளன.
பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
பேருராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பகுதியில் கடற்கரைக்குச் செல்லும் சாலையில், இந்தியன் வங்கி செயல்படுகிறது.
கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான வேம்பனுார், கப்பிவாக்கம், விளம்பூர், பனையூர், கரும்பாக்கம், கோட்டைக்காடு, தேன்பாக்கம் என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இது பிரதான வங்கி.
தற்போது இந்த வங்கியில், 10,000க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் உள்ளன. இதனால், தினசரி ஏராளமான வாடிக்கையாளர்கள் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஒரே ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி மட்டும் செயல்படுவதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண்கள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், அவசர பண பரிவர்த்தனை தேவைக்காக வங்கிக்கு வருவோர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி கடப்பாக்கத்தில் மேலும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.