/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடநெருக்கடியில் குழந்தைகள் புது அங்கன்வாடி கட்டப்படுமா?
/
இடநெருக்கடியில் குழந்தைகள் புது அங்கன்வாடி கட்டப்படுமா?
இடநெருக்கடியில் குழந்தைகள் புது அங்கன்வாடி கட்டப்படுமா?
இடநெருக்கடியில் குழந்தைகள் புது அங்கன்வாடி கட்டப்படுமா?
ADDED : ஆக 25, 2024 11:20 PM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 4வது வார்டுக்குட்பட்ட மதுவிலக்கு காவல் நிலையம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சொந்தமான, பழைய ஓடுகள் கொண்டு வேயப்பட்ட கட்டடத்தில், 30 ஆண்டுகளாக அங்கன்வாடி மையக் கட்டடம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு, கழிப்பறை வசதியின்றி உள்ளது. இதனால், மையத்திற்கு வெளியே திறந்தவெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அப்பகுதியில், கால்நடைகள் மற்றும் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், குழந்தைகள் மற்றும் சமையல் செய்யும் கூடம், சமையலுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் என அனைத்தும், ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையத்தை மாற்றி, போதிய வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.