/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீவாடி ஊராட்சி நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
/
சீவாடி ஊராட்சி நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சீவாடி ஊராட்சி நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
சீவாடி ஊராட்சி நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 07, 2024 10:55 PM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே சீவாடி ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் படித்து வருகின்றனர். இங்கு, நுாலகம் அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி கட்டடத்தில் நுாலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போதிய இடவசதி இல்லாததால், நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சமுதாயக் கூடம் அருகே உள்ள பழைய கால்நடை மருத்துவமனையை அகற்றிவிட்டு, புதிதாக விரிவுபடுத்தப்பட்ட நுாலக கட்டடம் அமைக்க வேண்டும்.
அதோடு, கூடுதல் புத்தகங்கள் மற்றும் மேஜைகள் வழங்கி, நுாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.