/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்கல் கிராம சாலையில் சிறுபாலம் அமைக்கப்படுமா?
/
நெடுங்கல் கிராம சாலையில் சிறுபாலம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 08, 2024 12:19 AM

அச்சிறுபாக்கம்:மின்னல் சித்தாமூர் -- நெடுங்கல் செல்லும் கிராம சாலையில், சேதமடைந்துள்ள பாலத்தை அகற்றி, புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்டுள்ளனர்.
ஒரத்தி- - தொழுப்பேடு மாநில நெடுஞ்சாலையில், மின்னல்சித்தாமூர் பகுதியில் இருந்து பிரிந்து, நெடுங்கல் ஊராட்சிக்கு செல்லும் கிராம சாலை உள்ளது.
இந்த சாலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுபாலம், 2022-ல் பெய்த கனமழையில் சேதமானது.
இதனால், மழைநீர் வெளியேற முடியாமல், சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, தற்காலிகமாக பாலம் அமைத்து, மேற்பகுதியில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையில், மண் அடித்துச் செல்லப்பட்டு பள்ளமானது. இதனால், பழைய வீட்டில் இடிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளை சிறு பாலத்தின் மீது கொட்டி வைத்துள்ளனர்.
இதனால், இவ்வழியை பயன்படுத்தும் இருசக்கர வாகன ஓட்டிகள், கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இப்பகுதியில் ஆய்வு செய்து, நிரந்தர தீர்வாக, சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.