/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்.பி.,கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?
/
எஸ்.பி.,கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?
எஸ்.பி.,கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?
எஸ்.பி.,கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில் கிளாம்பாக்கத்திலிருந்து பஸ் இயக்கப்படுமா?
ADDED : மார் 02, 2025 11:36 PM
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதுார் தடத்தில், கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் தடத்தில் திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
அதேபோல ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கில் ஆண், பெண் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர் பகுதிகளில், வெளி மாவட்ட இளம்பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தடத்தில், செங்கல்பட்டு -- திருவள்ளூர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் நான்கு தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறன.
இது தவிர, தாம்பரத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் வழியாக மீண்டும் தாம்பரம் செல்ல, ஒரே ஒரு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த தடத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு, நேரடி பேருந்துகள் இல்லை. இதனால், இந்த பகுதி மக்கள் சிங்கபெருமாள்கோவில் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக கிளாம்பாக்கம் செல்லும் நிலை உள்ளது.
மேலும், இந்த தடத்தில் மகளிர் இலவச பேருந்து இயக்கப்படாததால், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில்,'லிப்ட்' கேட்டு செல்லும் நிலை தொடர்கிறது.
எனவே, இந்த தடத்தில் கூடுதல் பேருந்து மற்றும் மகளிர் பேருந்துகள் இயக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள்கோவில் -- திருவள்ளூர் தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில், பேருந்துகளில் அதிக அளவில் நெரிசல் உள்ளது. தொழிற்சாலைகளுக்கு துாய்மை பணி, தோட்ட பணிகளுக்கு செல்வோர், தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை ஷேர் ஆட்டோ கட்டணமாக செலுத்தும் நிலை உள்ளது. எனவே, மற்ற தடங்களில் உள்ளது போல, இந்த தளத்திலும் மகளிர் இலவச பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.திவ்யா, சிங்கபெருமாள்கோவில்.