/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எல்லையில் உள்ள ஊராட்சிகளில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
/
எல்லையில் உள்ள ஊராட்சிகளில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
எல்லையில் உள்ள ஊராட்சிகளில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
எல்லையில் உள்ள ஊராட்சிகளில் 'சிசிடிவி' பொருத்தப்படுமா?
ADDED : செப் 15, 2024 11:13 PM
அச்சிறுபாக்கம் : மதுராந்தகம் வட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஊராட்சிப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. -
மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டு, 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொழுப்பேடு, கரசங்கால், முருங்கை, வேப்பங்கரணை, விண்ணம்பூண்டி, கிளியா நகர், ராமாபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள், செங்கல்பட்டு மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ளன.
இக்கிராமங்களை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எல்லைகள் ஆரம்பமாகின்றன.
அதில், ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து கரசங்கால், கொங்கரைமாம்பட்டு, விண்ணம்பூண்டி, வேப்பங்கரணை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, 40க்கும் மேற்பட்ட கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
மாவட்ட எல்லையின் கடைசியில் உள்ள கிராமங்கள் வழியே நெடுஞ்சாலை செல்வதால், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, அவ்வழியே தப்பிச் செல்வோர் அதிகரித்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் வகையில், சாலையின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, மாவட்ட எல்லையில் உள்ள கிராமங்களின் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

