/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரால்பாக்கம் சாலை இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
/
விரால்பாக்கம் சாலை இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
விரால்பாக்கம் சாலை இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
விரால்பாக்கம் சாலை இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்படுமா?
ADDED : மே 28, 2024 06:28 AM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த விரால்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலையின் இருபுறமும் வடிகால்வாய், சிறுபாலம், தரமான சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
எங்கள் பகுதியில், புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்க, சாலையின் இருபுறமும் இடம் ஒதுக்கப்படவில்லை. அதனால், வடிகால்வாய் அமைக்க, சில இடங்களில் இடம் இல்லை. எனவே, வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையின் குறுக்கே, சிறிய அளவில் குழாய் புதைக்க உள்ளனர். அந்த குழாயில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். அதற்கு மாற்றாக, அங்கு சிறுபாலம் அமைத்து, சாலையை தரமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.