/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு போக்குவரத்து கழகத்தில் செங்கை மண்டலம் அமையுமா?
/
அரசு போக்குவரத்து கழகத்தில் செங்கை மண்டலம் அமையுமா?
அரசு போக்குவரத்து கழகத்தில் செங்கை மண்டலம் அமையுமா?
அரசு போக்குவரத்து கழகத்தில் செங்கை மண்டலம் அமையுமா?
ADDED : ஆக 11, 2024 02:17 AM
மாமல்லபுரம்:விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இக்கோட்டம், மாவட்டத்திற்கு ஒரு மண்டலமாக, விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மண்டலம் என்பது, தற்போதைய காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, செங்கல்பட்டு மாவட்டம், கடந்த 2019ல் பிரிக்கப்பட்டது.
மாவட்டத்திற்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கென, செங்கல்பட்டு மண்டலம் தனியாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகள் கடந்தும், புதிதாக செங்கல்பட்டு மண்டலம் உருவாக்கப்படாமல் தாமதப்படுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்துக் கழக அலுவலர்கள், நிர்வாக செயல்பாடு தொடர்பாக, காஞ்சிபுரத்தில் நகருக்கு வெளியேயுள்ள மண்டல அலுவலகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது.
அதனால், பணி சிரமம், தாமதம், நிறுத்தப்பட்ட தடங்களிலும், புதிய தடங்களிலும் பேருந்து இயக்க முடிவெடுக்க இயலாதது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக, போக்குவரத்துக் கழகத்தினர் கூறுகின்றனர்.
இதைத்தவிர்க்க, செங்கல்பட்டு போக்குவரத்து மண்டலம் உருவாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.