/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்பங்களை பார்வையிட அனுமதி நேரம் நீட்டிக்கப்படுமா?
/
மாமல்லை சிற்பங்களை பார்வையிட அனுமதி நேரம் நீட்டிக்கப்படுமா?
மாமல்லை சிற்பங்களை பார்வையிட அனுமதி நேரம் நீட்டிக்கப்படுமா?
மாமல்லை சிற்பங்களை பார்வையிட அனுமதி நேரம் நீட்டிக்கப்படுமா?
ADDED : ஜூன் 04, 2024 05:26 AM
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால சிற்பங்களை, சுற்றுலா பயணியர் காண்கின்றனர்.
தொல்லியல் துறை, அவற்றை பராமரித்து பாதுகாக்கிறது. பயணியர் சிற்பங்களைக் காண, இந்தியருக்கு தலா 40 ரூபாய், வெளிநாட்டவருக்கு தலா 600 ரூபாய் என, அத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது.
ஒரே நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம். காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால், மாலை 7:00 மணி வரை, பகல் நேரமாக நீடிக்கிறது. வெயில் சூழலில், வெயில் தணிந்து, மாலையில் தான் பயணியர் அதிகம் குவிகின்றனர்.
ஏதேனும் ஒரு சிற்ப பகுதியில், மாலை 5:30 மணிக்கு நுழைவுச்சீட்டு பெறுவோர், பின் மற்ற இடங்களுக்கு செல்லும்போது, பார்வை அனுமதி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, பயணியரை அனுமதிப்பதில்லை.
பார்வை நேரம் அறியாமல், 6:00 மணிக்கு பின் செல்லும் பயணியர், பாதுகாவலர்களிடம் தகராறு செய்கின்றனர். சிற்ப வளாகத்தில் உள்ள பயணியரையும், 6:00 மணிக்கு வெளியேற்றுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணியர் ஆர்வம் கருதி, இருள் சூழ துவங்கும் வரை, பயணியரை அனுமதிக்குமாறு, சுற்றுலாஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.