/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரும்புலியூருக்கு மீண்டும் பஸ் இயங்குமா?
/
அரும்புலியூருக்கு மீண்டும் பஸ் இயங்குமா?
ADDED : மே 06, 2024 12:07 AM
உத்திரமேரூர் : காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத், பழையசீவரம், திருமுக்கூடல், அரும்புலியூர் வழியாக, தடம் எண்: டி55ஏ என்ற அரசு பேருந்து குருமஞ்சேரி வரை இயக்கப்படுகிறது.
அருங்குன்றம், சீத்தாவரம், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி போன்ற கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து வாயிலாக காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
இப்பேருந்து, நாளொன்றுக்கு மூன்று முறை இயங்கி வந்தது. இந்நிலையில், இப்பேருந்து சேவை, ஓராண்டாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், மதிய நேரத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து, அரும்புலியூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு பயணிக்க, பேருந்து வசதி இல்லாமல் கிராமத்தினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நிறுத்தம் செய்த மதிய நேர பேருந்து சேவையை, மீண்டும் இயக்க வேண்டும் என, குருமஞ்சேரி மற்றும் அரும்புலியூர் உள்ளிட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.