/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவளம் வரையிலான பஸ்கள் மாமல்லைக்கு நீட்டிக்கப்படுமா?
/
கோவளம் வரையிலான பஸ்கள் மாமல்லைக்கு நீட்டிக்கப்படுமா?
கோவளம் வரையிலான பஸ்கள் மாமல்லைக்கு நீட்டிக்கப்படுமா?
கோவளம் வரையிலான பஸ்கள் மாமல்லைக்கு நீட்டிக்கப்படுமா?
ADDED : செப் 09, 2024 06:27 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், சென்னையின் பல பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.
எனவே, தினசரி சென்னை சென்று திரும்புகின்றனர். இதுமட்டுமின்றி, வியாபாரிகள், பிராட்வே வர்த்தக பகுதிக்கும் செல்கின்றனர். அரசு, தனியார் கல்லுாரி மாணவ - மாணவியர் செல்கின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 22 ஆண்டுகள் முன், கல்பாக்கத்திலிருந்து சென்னை பிராட்வே பகுதிக்கு, மாமல்லபுரம் வழியே இயக்கிய பேருந்துகள், பயணியருக்கு பெரிதும் பயன்பட்டன. இந்த பேருந்துகள், அண்ணா சாலை, மெரினா கடற்கரை வழியே இயக்கப்பட்டன.
சென்னை புறநகர் பேருந்து நிலையம், 2002ல் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டு, பேருந்துகள் அங்கிருந்தே இயக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கல்பாக்கம் - சென்னை தட அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
சென்னை - புதுச்சேரி தட அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில் மாமல்லபுரம் பயணியர், எளிதில் பயணம் செய்ய இயலாது.
திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 588 மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து மட்டுமே, மிக குறைவாக இயக்கப்படுகின்றன. தற்போது, பணிபுரிவது உள்ளிட்ட அவசியத்திற்கு சென்றுவரும் பயணியர் அதிகரித்துள்ளனர்.
அவர்கள், திருவான்மியூர் சென்று, அங்கிருந்தே பிற இடங்கள் செல்கின்றனர். அதனால், பண விரயம், பல மணி நேர விரயம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
பிராட்வேயிலிருந்து கோவளத்திற்கு, தடம் எண் 109ல், ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாமல்லபுரம் பயணியர் நலன் கருதி, காலை, மாலை சில நடைகளை மாமல்லபுரம் வரை நீட்டிக்கவும், அண்ணா சாலை, மெரினா கடற்கரை வழியே இயக்கவும், பயணியர் வலியுறுத்துகின்றனர்.