/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் அணைக்கட்டில் சீரமைக்கப்படுமா?
/
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் அணைக்கட்டில் சீரமைக்கப்படுமா?
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் அணைக்கட்டில் சீரமைக்கப்படுமா?
ஏரி உபரிநீர் கால்வாய் பாலம் அணைக்கட்டில் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 19, 2024 12:03 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பகுதியில் இருந்து அணைக்கட்டு செல்லும், 12 கிலோ மீட்டர் தார் சாலை உள்ளது. இது, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
நரியூர், பச்சம்பாக்கம், தண்டரை, செம்பூர் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
சாலை நடுவே, மதுராந்தகம் ஏரி மேல்மட்ட உபரிநீர் கால்வாய் கடக்கும் பகுதியில் பாலம் உள்ளது. இது, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதனால், முறையான பராமரிப்பு இல்லாமல், பாலத்தின் தடுப்புகள் சேதமடைந்துள்ளன.
பாலம் அருகே மரம், செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. அதனால், மழைக்காலத்தில் உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் செல்ல முடியாமல் பாலம் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தில் உள்ள புதர்களை அகற்றி, பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.