/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய துணை சுகாதார நிலையம் பெருக்கரணையில் அமையுமா?
/
புதிய துணை சுகாதார நிலையம் பெருக்கரணையில் அமையுமா?
புதிய துணை சுகாதார நிலையம் பெருக்கரணையில் அமையுமா?
புதிய துணை சுகாதார நிலையம் பெருக்கரணையில் அமையுமா?
ADDED : பிப் 10, 2025 01:52 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 50 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளி அருகே, துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் வாயிலாக பெருக்கரணை, பேரம்பாக்கம், புதுார் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
கர்ப்பிணியருக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், சொட்டு மருந்து அளித்தல், ரத்த அழுத்தம் பரிசோதனை, சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.
கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து, புதர் மண்டி உள்ளது.
செவிலியர்கள் வீடு வீடாகச் சென்று கர்ப்பிணியர், குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மற்றும் செவிலியர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, பொது சுகாதார அதிகாரிகள், பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.