/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடை கட்டட பணி விரைந்து முடிக்கப்படுமா?
/
ரேஷன் கடை கட்டட பணி விரைந்து முடிக்கப்படுமா?
ADDED : ஜூலை 05, 2024 12:36 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்த ரேஷன் கடை பழமையானதால், புதிதாக நியாய விலை கடை அமைக்க, மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2021- - 22ல், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடுநிலைப்பள்ளி எதிரே கட்டடப் பணி ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளை கடந்தும், கட்டடப் பணி முழுமை பெறாமல், சிமென்ட் கான்கிரீட் தளத்தை ஒட்டிய நிலையில் கிடப்பில் உள்ளது.
இதனால், தற்காலிகமாக ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள இ -- சேவை மைய கட்டடத்தில், நியாய விலைக் கடை இயங்கி வருகிறது.
வயது முதிர்ந்தவர்கள், அதிக துாரம் சென்று அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வர சிரமப்படுகின்றனர்.
எனவே, ரேஷன்கடை கட்டடப் பணியை விரைந்து முடிக்க, துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.