/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுத்தப்படுமா?
ADDED : மே 07, 2024 11:47 PM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெரிய கயப்பாக்கம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணறுகளில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, நேரடியாக குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
வினியோகம் செய்யப்படும் குடிநீர் சுத்தமாக இல்லை எனக் கூறி, ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், கயப்பாக்கம் காலனி பகுதியில், மேல்நிலை தேக்கத் தொட்டி அருகே, 2017ம் ஆண்டு, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்த காரணத்தால், சில மாதங்களாக சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் பூட்டியே உள்ளது.
இதனால், அப்பகுதிவாசிகள் குழாய்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

