/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூர் பஜாரில் சுகாதார வளாகம் அமையுமா?
/
பவுஞ்சூர் பஜாரில் சுகாதார வளாகம் அமையுமா?
ADDED : ஆக 03, 2024 10:40 PM
பவுஞ்சூர்:
பவுஞ்சூர் பஜார் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மீன் மார்க்கெட், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.
மேலும், ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். திருவாதுார், வெளிக்காடு, செங்காட்டூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், தினமும் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பஜார் பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லாததால், கடைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பஜார் பகுதிக்கு வந்து செல்வோர், இயற்கை உபாதைகளை கழிக்க கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், சாலையோரம் அமைக்கப்படும் கடைகள் மற்றும் வார சந்தை கடைகளுக்கு ஊராட்சி வாயிலாக ஏலம் விடப்பட்டு வாடகை வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பஜார் பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.