/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?
/
ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?
ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?
ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சை மையம் அமையுமா?
ADDED : மே 01, 2024 10:41 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் ஊராட்சியில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, உயிர் காக்கும் மருந்துகள், ஊசிகள், ஷாம்பு, தைலம் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும், 30க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக்காற்று, விஷம் கலந்த கழிவு நீர் போன்ற பிரச்னைகள், ஆலத்துார், வெங்கலேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.
இங்குள்ள ரசாயன தொழிற்சாலைகளில், அடிக்கடி தீ விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
அச்சூழ்நிலையில், திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு, தொழிலாளர்கள் செல்ல வேண்டியுள்ளது.
உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள அவசர சிகிச்சை மையம் சிட்கோ வளாகத்தில் இல்லை. இதனால், பாதிப்புகள் அதிகமாகும் சூழல் உள்ளது.
எனவே, தொழிலாளர்கள் நலன் கருதி, இங்கு அவசர சிகிச்சை மையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

