/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் உணவருந்த இடவசதி அமையுமா?
/
தற்காலிக பேருந்து நிலையத்தில் உணவருந்த இடவசதி அமையுமா?
தற்காலிக பேருந்து நிலையத்தில் உணவருந்த இடவசதி அமையுமா?
தற்காலிக பேருந்து நிலையத்தில் உணவருந்த இடவசதி அமையுமா?
ADDED : ஜூலை 14, 2024 01:03 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உணவருந்த இடவசதி இல்லாததால், மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக 2.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 20 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதன் காரணமாக, தற்காலிக பேருந்து நிலையம், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, தினமும் 5,000த்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் 23 நகர பேருந்துகள், புறநகர் பேருந்துகள் 22 என, 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், பணியாற்றும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு உணவருந்த ஓய்வறை இல்லாததால், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் நலன் கருதி, தற்காலிக பேருந்து நிலையத்தில் உணவருந்த இடவசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.