/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடம் எண் 'டி7' டவுன் பஸ் சேவை கடப்பாக்கம் வரை நீட்டிக்கப்படுமா?
/
தடம் எண் 'டி7' டவுன் பஸ் சேவை கடப்பாக்கம் வரை நீட்டிக்கப்படுமா?
தடம் எண் 'டி7' டவுன் பஸ் சேவை கடப்பாக்கம் வரை நீட்டிக்கப்படுமா?
தடம் எண் 'டி7' டவுன் பஸ் சேவை கடப்பாக்கம் வரை நீட்டிக்கப்படுமா?
ADDED : ஆக 06, 2024 10:53 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவிலுக்கு, மதுராந்தகத்தில் இருந்து டி7 தடம் எண் கொண்ட, இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து,செய்யூர், சித்தாமூர், முதுகரை வழியாகமதுராந்தகம்செல்கிறது.
இடைக்கழிநாடுபேரூராட்சிக்குஉட்பட்ட கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 10,000க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்துவருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து, தினசரி நுாற்றுக்கணக்கானோர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், சித்தாமூர், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்குசெல்கின்றனர்.
இப்பகுதியில் இருந்து செய்யூர் வழியாக, மதுராந்தகத்திற்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாததால், தனியார் பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் எல்லையம்மன் கோவில் சென்று,அங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக செல்லும் நிலைஉள்ளது.
இதனால், பொது மக்களுக்கு பணவிரயம் மற்றும் கால விரயமா வதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களின்நலன் கருதி, தற்போதுஎல்லையம்மன் கோவில் வரைஇயக்கப்படும்அரசு பேருந்தை,காசிபாட்டை சாலை வழியாக, கடப்பாக்கம்மார்க்கெட் வரை இயக்க வேண்டும்.
அல்லது கிழக்குகடற்கரை சாலைவழியாக கடப்பாக்கம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அப்பகுதிவாசிகள்எதிர்பார்க்கின்றனர்.