/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?
/
ஜமீன்பூதுார் நுாலகம் பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : ஜூன் 06, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செய்யூர் அருகே ஜமீன்பூதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஜமீன்பூதுார் காலனி பகுதியில், 15 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் அமைக்கப்பட்டது.
சில ஆண்டுகளாக, நுாலகம் செயல்படாமல் நிறுத்தப்பட்டது. இதனால், நுாலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் மேஜைகள் சேதமடைந்து, நுாலகம் செயல்படாமல் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அப்பகுதிஇளைஞர்களின் நலன் கருதி நுாலகத்தை சீரமைத்து, புதிய புத்தகங்கள் மற்றும் மேஜைகள் அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.