/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டிலிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
/
வீட்டிலிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
வீட்டிலிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
வீட்டிலிருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
ADDED : ஜூலை 17, 2024 07:50 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடமலைப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், 89.
இவர், நேற்று முன்தினம், தொழுப்பேடு -- ஒரத்தி மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள இவரது வீட்டில், போர்டிகோ பகுதியில் அமர்ந்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு பெண், மூதாட்டியிடம் பேச்சு கொடுப்பது போல், அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் மற்றும் காதில் இருந்த கம்மலை காதுடன் சேர்த்து பிடித்து இழுத்துள்ளார்.
மூதாட்டி வலியால் கத்தியதால், கம்மலை கீழே போட்டுவிட்டு, செயினை மட்டும் எடுத்துக்கொண்டு, அப்பெண் தப்பினார்.
முனியம்மாளின் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அவரது மகன் ஏழுமலை, தாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
பின், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், ஏழுமலை அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
இதில், அப்பகுதியில் மீன் விற்பனை செய்த, கடமலைப்புத்துார் பகுதியைச் சேர்ந்த சுந்தரி, 56, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது குறித்து, அவர் ஒப்புக்கொண்டார். பின், சுந்தரியை நேற்று மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.