/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலை அலைக்கழிப்பு போராட்டத்தில் குதித்த பெண்கள்
/
100 நாள் வேலை அலைக்கழிப்பு போராட்டத்தில் குதித்த பெண்கள்
100 நாள் வேலை அலைக்கழிப்பு போராட்டத்தில் குதித்த பெண்கள்
100 நாள் வேலை அலைக்கழிப்பு போராட்டத்தில் குதித்த பெண்கள்
ADDED : பிப் 27, 2025 11:49 PM

அச்சிறுபாக்கம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு வெள்ளப்புத்துார் ஊராட்சி உள்ளது.
இங்கு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி நடந்து வருகிறது.
தற்போது, ஊராட்சி பகுதிகளில் குளம் வெட்டுதல் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, வெள்ளப்புத்துார் ஊராட்சியில், இரண்டு தொகுப்பாக பிரித்து 45 பேர் மற்றும் 75 பேருக்கு என, தினசரி வருகை பட்டியல், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று, தினசரி வருகை பட்டியலில் உள்ள நபர்களில் பாதி பேர் மட்டுமே பணி செய்ய வேண்டும். மீதி ஆட்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பணித்தள பொறுப்பாளருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்க மறுத்த வெள்ளப்புத்துாரை சேர்ந்த 100 நாள் திட்ட பெண்கள், அனைவருக்கும் பணி வழங்க வேண்டுமென, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சென்ற ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின், முறையாக பணி வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதால், பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
அதேபோன்று, சிறுபேர்பாண்டி ஊராட்சியில், 100 நாள் பணிக்குச் சென்ற பணியாளர்களுக்கு, பாதி நபர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து, அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.