/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேலோ இந்தியா சார்பில் மகளிர் சைக்கிள் போட்டி
/
கேலோ இந்தியா சார்பில் மகளிர் சைக்கிள் போட்டி
ADDED : செப் 02, 2024 01:43 AM

திருப்போரூர்:'கேலோ இந்தியா' அமைப்பின் சார்பில், பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள், நேற்று திருப்போரூரில் நடந்தது. இதில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, 100 பெண்கள் பங்கேற்றனர்.
மகளிருக்கான 36 கி.மீ., எலைட் பிரிவில்,தமிழகத்தைச் சேர்ந்த கஸ்துாரி முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
கர்நாடகா அக் ஷதா பூதானால் இரண்டாமிடமும் அக் ஷதா பிராதர் மூன்றாமிடம் பிடித்து, முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
அதேபோல், 30 கி.மீ., இளம்பெண்கள் பிரிவில், கர்நாடகாவைச் சேர்ந்த பாயல் சவான் முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த நிறைமதி இரண்டாமிடமும், கர்நாடகாவை சேர்ந்த ஆயிஷா மோமின் மூன்றாமிடமும் பிடித்தனர்.
அதன்பின் நடந்த, 18 கி.மீ., ஜூனியர் மற்றும் இளம்பெண்கள் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த தபிதா முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கர்நாடகாவை சேர்ந்த தீபிகா எஸ் படடேர் இரண்டாமிடமும், கர்நாடகாவை சேர்ந்த கோகிலா சவான் மூன்றாமிடமும் வென்றனர்.