/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலைவாய்ப்பு முகாமில் 119 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 119 பேருக்கு பணி ஆணை
ADDED : ஆக 16, 2024 11:47 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் வேலை வாய்ப்பு முகாம், நேற்று நடந்தது.
இந்த முகாமில், 33 தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த மனிதவள மேபாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், வேலை கோரி விண்ணப்பம் அளித்த 487 பேரின் மனுக்கள் பரிசீலனை செய்தனர்.
இதில், 119 பேருக்கு, தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆணையில், 62 ஆண்களும், 57 பெண்களும் அடங்குவர்.
மாற்றுத்திறனாளிகள் ஒன்பது பேரில், இரண்டு பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், முதற்கட்ட தேர்வில், 139 பேர் தேர்வு செய்யப்பட்டதாக, வேலை வாய்ப்புத் துறையினர் தெரிவித்தனர்.

