/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் உலக தாய்ப்பால் வார விழா
/
செங்கையில் உலக தாய்ப்பால் வார விழா
ADDED : ஆக 02, 2024 01:06 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், உலக தாய்ப்பால் வாரவிழா நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.
அதில், தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம், தாய்ப்பால் வழங்குவதின் வாயிலாக, தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த கண்காட்சியை, கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
அதன்பின், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
முன்னதாக, தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை, கலெக்டர் முன்னிலையில், பெண்கள், அனைத்து துறை ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.