/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்
/
உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்
உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்
உலக செஸ் குத்துச்சண்டை; திருவள்ளூர் வீரர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 31, 2024 11:39 PM

திருவள்ளூர் : கோல்கட்டா மாநிலம் குதிராம் அனுஷிலான்கேந்தரா பகுதியில், மூன்றாவது உலக செஸ்குத்துச்சண்டை போட்டி,நடந்தது.
குத்துச்சண்டை மற்றும் செஸ் ஆகிய இரு பாரம்பரிய போட்டிகளை இணைத்து விளையாடும்இப்போட்டியில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவரும், ஜெயா பிஸியோதெரபி கல்லுாரி மாணவருமான அவினாஷ் ராஜ்குமார்,20, என்பவர், 55 கிலோ எடை பிரிவில் இரண்டாமிடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல் மேல்நல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவரும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார்மருத்துவமனையில்பணிபுரிந்து வரும் செ.கார்த்திகேயன், 27, என்பவர், 85 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.