/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒய்.எம்.சி.ஏ., கோப்பை மாமல்லை பள்ளி அசத்தல்
/
ஒய்.எம்.சி.ஏ., கோப்பை மாமல்லை பள்ளி அசத்தல்
ADDED : ஜூலை 31, 2024 11:36 PM
மாமல்லபுரம் : சென்னை, மேற்கு தாம்பரம், சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், மாநில பள்ளிகள் இடையே, சாய்ராம் கோப்பை மாணவ - மாணவியர் பூப்பந்து போட்டி நடத்தப்பட்டது.
மாணவர் பிரிவில், சாம்பியன் கோப்பையை மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வென்றனர். மாணவர் - மாணவியர் ஆகிய பிரிவுகளில், மூன்றாம் இடத்தை, மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர் வென்றனர்.
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், 'பக்' கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பூப்பந்து போட்டி சாம்பியன் கோப்பையை, மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கைப்பற்றினர்.
மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மூன்றாமிடம் வென்றனர். இவ்விளையாட்டுக்கு பயிற்சியளித்த மாமல்லபுரம் பல்லவர்கள் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள், கோப்பை வென்ற மாணவ - மாணவியரைபாராட்டினர்.