/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் கனிமங்கள் எடுத்துச் செல்ல 'இ- பெர்மிட்'டுக்கு விண்ணப்பிக்கலாம்
/
செங்கையில் கனிமங்கள் எடுத்துச் செல்ல 'இ- பெர்மிட்'டுக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கையில் கனிமங்கள் எடுத்துச் செல்ல 'இ- பெர்மிட்'டுக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கையில் கனிமங்கள் எடுத்துச் செல்ல 'இ- பெர்மிட்'டுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 27, 2025 09:03 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கனிமங்களை எடுத்துச் செல்ல, குவாரி குத்தகைதாரர்கள் 'ஆன்லைன்' வாயிலாக 'இ- பெர்மிட்'டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், கல் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு, குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவை விட, கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும் வேண்டும்.
இதையடுத்து, வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டு எனும் 'இ-பெர்மிட்'டை, இணையதளம் வாயிலாக வழங்குவதற்கு, அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக,'இ-பெர்மிட்' வழங்கும் நடைமுறை, கடந்த 25ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
குத்தகைதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும், நடைச்சீட்டு எனும் இ-பெர்மிட் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், குத்தகைதாரர்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில், விதிகளுக்கு உட்பட்டு குவாரி பணி மேற்கொள்ள வேண்டும்.
வாகன ஓட்டுனர்கள், குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது, உரிய அனுமதி சீட்டு வைத்திருக்க வேண்டும்.
கிரஷரிலிருந்து எம்- சாண்ட், ஜல்லி, சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது, உரிய போக்குவரத்து நடைச் சீட்டும் பெற்று, கனிமம் கொண்டு செல்ல வேண்டும்.
அவற்றை, வாகன தணிக்கையின் போது, வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் குவாரி பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டல், அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.