/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு வாலிபர் கைது; கூட்டாளிக்கு வலை..
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு வாலிபர் கைது; கூட்டாளிக்கு வலை..
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு வாலிபர் கைது; கூட்டாளிக்கு வலை..
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு வாலிபர் கைது; கூட்டாளிக்கு வலை..
ADDED : செப் 09, 2024 06:21 AM
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன், 40. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், கடந்த 30ம் தேதி, குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அடுத்த நாள், மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில், ஜெகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அப்துல் ரகிம், 23, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து, 5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அப்துல் ரகிமை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரது கூட்டாளி ஒருவரை தேடி வருகின்றனர்.