ADDED : பிப் 22, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஒழலுார் கிராமத்தில் கலால் போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய், 19. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சஞ்சயை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.