ADDED : ஜூன் 26, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன், 26; ரவுடி. இவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த மே மாதம் 13ம் தேதி வாலிபரை வெட்டி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்த திருக்கழுக்குன்றம் போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார்.
இதனையேற்று, லிங்கேஸ்வரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம், உத்தரவிட்டார். அதன்பின், புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் நேற்று வழங்கினர்.