/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி
/
மின் கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : மார் 05, 2025 11:41 PM
வண்டலுார், வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நிலை தடுமாறி, 'மீடியன்' மின் கம்பத்தில் மோதி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக, பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவர, அந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி ஆனந்த், 25, என்பதும், ஊரப்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார் என்பதும் தெரிய வந்தது.
தவிர, தலைக் கவசம் அணியாமல், மது போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார் என்பது தெரியவர, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.