ADDED : ஏப் 17, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம்:சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த சரவணன் மகன் தினேஷ், 19. நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு, யமஹா இருசக்கர வாகனத்தில், கல்பாக்கம் அடுத்த வாயலுாருக்கு சென்று கொண்டிருந்தார்.
கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பம் அருகே சென்றபோது, சாலை தடுப்பில் மோதி, அதே இடத்தில் பலியானார்.
இதுகுறித்து, அவரது தந்தை அளித்த புகாரின்படி, சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

