sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது அணி ஒன்றிய குழுவை புறக்கணித்த 10 கவுன்சிலர்கள்

/

லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது அணி ஒன்றிய குழுவை புறக்கணித்த 10 கவுன்சிலர்கள்

லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது அணி ஒன்றிய குழுவை புறக்கணித்த 10 கவுன்சிலர்கள்

லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது அணி ஒன்றிய குழுவை புறக்கணித்த 10 கவுன்சிலர்கள்


UPDATED : மார் 29, 2025 01:56 AM

ADDED : மார் 29, 2025 01:35 AM

Google News

UPDATED : மார் 29, 2025 01:56 AM ADDED : மார் 29, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்தில் 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் லத்துார் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் பாபுவின் மனைவி சுபலட்சுமி ஒன்றிய குழு தலைவராகவும், கிருஷ்ணவேணி ஒன்றிய குழு துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

லத்துார் ஒன்றியத்தில் இரு தி.மு.க., ஒன்றிய செயலர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, தி.மு.க., இரண்டு அணிகளாக செயல்பட்ட நிலையில், 2023 அக்., 13ம் தேதி ஒன்றிய குழுத் தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, லத்துார் ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் பதவி காலியென அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது அணி


இதையடுத்து கடந்த ஆண்டு காலியான பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, தி.மு.க.,வைச் சேர்ந்த எட்டு கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள் ஆதரவுடன், லத்துார் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரனின் மனைவியான, 6வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஒன்றிய குழு தலைவராகவும், ஒன்றிய குழு துணைத் தலைவராக, 10வது வார்டு கவுன்சிலர் சித்ராவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இழுபறி


பல்வேறு இழுபறிக்குப் பின் ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,

தற்போது தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இருந்த தி.மு.க., கவுன்சிலர்கள் மூவர் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர், ஒன்றிய குழு தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்களது பகுதிகளுக்கு பணி வழங்குவது இல்லை எனவும் குற்றஞ்சாட்டி, தற்போது மூன்றாவது அணியாக ஏற்பட்டுள்ளது.

லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று 12:00 மணியளவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி மற்றும் சிவக்குமார் தலைமையில், மாதாந்திர கூட்டம் நடந்தது.

சலசலப்பு


கூட்டத்தில் ஒன்றிய குழுத் தலைவர் சாந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் சித்ரா, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலரும் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன், 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மோகனா மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் ராணி என, ஐந்து கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் சுபலட்சுமி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் பர்வதம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பமிட்டுச் சென்றனர்.

மேலும் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் ராமச்சந்திரன் மீது குற்றஞ்சாட்டி வரும், தி.மு.க., கவுன்சிலர்கள் மூவர் மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நால்வர் உட்பட 10 கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

ஏற்கனவே லத்துார் ஒன்றியத்தில் தி.மு.க., இரண்டு அணிகளாக இருந்து வரும் நிலையில், தற்போது 3வது அணி உறுவாகி இருப்பது, இப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவுன்சிலர் கூட்டம் புறக்கணிப்பு


அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரி, கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.

அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது.

இந்த பேரூராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, செயல் அலுவலரின்றி செயல்பட்டு வருகிறது.

பாதிப்பு


தற்காலிகமாக, கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றும் செயல் அலுவலர் அருள்குமார், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். பணி நாட்களில் மூன்று நாட்கள், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வந்து செல்கிறார்.

இதனால், அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் பாதிக்கப் படுகின்றனர்.

அலைச்சல்


மேலும், பேரூராட்சி பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாகவும், வளர்ச்சிப் பணிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கும், முடிவற்ற பணிகளுக்கு கையெழுத்து வாங்கவும், அதிகாரியை தேடி அலைந்து அலைச்சல் ஏற்படுவதாக கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று, அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், கவுன்சிலர் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலரை நியமிக்க கோரி தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர்.

எனவே, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க, பேரூராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு க., வெளிநடப்பு


மறைமலைநகர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., - 14; அ.தி.மு.க., - 5; ஐ.ஜே.கே.,- 1; சுயேட்சை - 1 என, 21 கவுன்சிலர்கள் உள்ளனர்.

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, தி.மு.க., நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் 21 வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வரவு செலவு குடிநீர், மின் விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் என, 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட 146 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 50 சதவீதத்திற்கு மேல் முறையாக பராமரிக்கப்படவில்லை, வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக ஆன்லைன் 'டெண்டர்' விடப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க., முன்னாள் நகர மன்ற தலைவரும் 10வது வார்டு கவுன்சிலருமான கோபி கண்ணன் கூறுகையில்,''

10 லட்சம் ரூபாய்க்கு மேல் அனைத்து பணிகளும் 'ஆன்லைன் டெண்டர்' விட வேண்டும் என விதி இருந்தும், 4.5 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர உள்ளோம்,'' என்றார்.

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நால்வர் வெளிநடப்பு செய்த நிலையில், 8வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கஸ்துாரி வெளிநடப்பு செய்யாமல் கூட்டத்தில் பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us