/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 10 பசுக்கள் பலி
/
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 10 பசுக்கள் பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 10 பசுக்கள் பலி
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 10 பசுக்கள் பலி
ADDED : ஜூன் 11, 2025 02:27 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை கிராமத்தில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, 10 பசுக்கள் பலியாகின.
பெரும்பேர்கண்டிகை பகுதியில் நேற்று முன்தினம், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், அங்குள்ள கிணறு அருகே இருந்த மின்கம்பம் சாய்ந்து, சவுக்கு தோப்பில் விழுந்துள்ளது.
இந்நிலையில், சிறுபேர்பாண்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான 6 பசுக்கள், ஏழுமலை, வீரப்பன், ஜெயராமன் ஆகியோருக்குச் சொந்தமான தலா ஒரு பசு, பெரும்பேர்கண்டிகையைச் சேர்ந்த ஒருவரின் ஒரு பசு என, 10 பசுக்கள், நேற்று மேய்ச்சலுக்கு சென்றன.
பெரும்பேர்கண்டிகைக்கு மேச்சலுக்குச் சென்ற நிலையில், அங்கு கீழே கிடந்த மின்கம்பிகளை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து, அனைத்து பசுக்களும் உயிரிழந்தன.
இது குறித்து, பசுக்களின் உரிமையாளர்கள், அச்சிறுபாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.
பின், அச்சிறுபாக்கம் கால்நடை மருத்துவ குழுவினர், வி.ஏ.ஓ., ஆகியோர் அப்பகுதிக்கு சென்று, இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்.