தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


ADDED : ஜூலை 02, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் பகுதிகளில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தை எதிர்த்து, மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை, 'வி.பி.ஜி., ராம்ஜி' என பெயர் மாற்றம் செய்து சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது.

இதை கண்டித்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பெயர் மாற்ற சட்ட நகலை கிழித்து எரிக்க முயன்ற போது, போலீசார் தடுத்து அவர்களை கைது செய்தனர்.

அதேபோல், திருப்போரூர் பேருந்து நிலையத்திலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், சங்கத்தின் ஒன்றிய தலைவர் லிங்கன், ஒன்றிய செயலர் அருள்ராணி, ஒன்றிய பொருளாளர் பூபதி, ஒன்றிய துணை தலைவர் மல்லிகா உட்பட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு நகராட்சி மண்டபத்தில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us