/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்போரூரில் 10ல் முகாம்
/
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்போரூரில் 10ல் முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்போரூரில் 10ல் முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்டம் திருப்போரூரில் 10ல் முகாம்
ADDED : ஜன 03, 2024 09:42 PM
திருப்போரூர்:நகர்ப்பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு, 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்புத் திட்ட முகாமை நடத்தி வருகிறது.
இதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில், சில குறிப்பிட்ட வார்டுகளை ஒருங்கிணைத்து, அந்த வார்டுகளுக்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில், வருவாய், நகராட்சி நிர்வாகம், மகளிர் திட்டம், மின்சார வாரியம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அதன் மீது தீர்வு கண்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்போரூர் பேரூராட்சியில், 15 வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், வரும் 10ம் தேதி நடைபெறுகிறது.
திருப்போரூர் கிழக்கு மாடவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வீடுகள்தோறும் அறிவிப்பு துண்டு பிரசுரம் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தும் வருகிறது.