/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவுநீர் கலந்த குடிநீர் 12 பேர் 'டிஸ்ஜார்ஜ்'
/
கழிவுநீர் கலந்த குடிநீர் 12 பேர் 'டிஸ்ஜார்ஜ்'
ADDED : டிச 09, 2024 03:28 AM
பல்லாவரம்,:தாம்பரம் மாநகராட்சி காமராஜர் நகர், கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதிகளுக்கு, சமீபத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
இந்த குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அதை பருகியதால், உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
கழிவுநீர் கலந்து குடிநீரை பருகிய பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பலியாகினர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 16 பேர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 12 பேர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு பேர், தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். புதிதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நிவாரணம் தர
த.வெ.க.,வுக்கு
அனுமதி மறுப்பு
தாம்பரம், டிச. 9-
பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பாதிக்கப்பட்ட பலர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களுக்கு பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க., கட்சியினர், மருத்துவமனைக்கு நேற்று சென்றனர்.
அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், மருத்துவமனை வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்க, அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இதனால், போலீசார் மற்றும் த.வெ.க.,வினர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் த.வெ.க.,வினர் வெளியே வந்து, நிவாரண பொருட்களை வழங்கினர்.