/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் 15 மாடுகள் பிடிப்பு
/
தாம்பரத்தில் 15 மாடுகள் பிடிப்பு
ADDED : ஜன 28, 2025 09:35 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், சாலைகளில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
சாலைகளில் சுற்றித்திரியும் அவை, திடீர் திடீரென குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மற்றொரு புறம், சாலையில் படுத்திருக்கும் மாடுகள், அவ்வழியாக செல்வோரை விரட்டி விரட்டி முட்டும் சம்பவங்களும், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
மாநகராட்சி சார்பில், அவ்வப்போது மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டாத மாடுகள், கோசாலைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள, 67,69,70 ஆகிய மூன்று வார்டுகளில், சாலைகளில் சுற்றித் திரிந்த 15 மாடுகளை, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று பிடித்து, வாலாஜாபாத்தில் உள்ள கோசாலையில் அடைத்தனர்.

