/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
தாம்பரத்தில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : பிப் 06, 2025 01:05 AM

தாம்பரம்:தாம்பரத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கடத்த முயன்ற, 1,500 கிலோ ரேஷன் அரிசியை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையம், 4-5 பிளாட்பாரத்தில், தாம்பரம் ரயில்வே போலீசார், நேற்று காலை, 5:30 மணிக்கு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தண்டவாளத்தை ஒட்டியுள்ள மரத்தடியில், 40 மூட்டைகள் இருந்ததை பார்த்து, விசாரித்தனர்.
மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த, ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் மற்றும் போலீசார், அவற்றை, தாம்பரம் உணவு பொருள் பாதுகாப்பு மற்றும் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
நேற்று காலை, தாம்பரத்தில் இருந்து மேற்குவங்கம் சென்ற, சந்திரகாஞ்சி எக்ஸ்பிரஸ் ரயிலில், இந்த அரிசி மூட்டைகளை கடத்த முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்,
தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.