/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலைவாய்ப்பு முகாம் 1,500 பேர் பங்கேற்பு
/
வேலைவாய்ப்பு முகாம் 1,500 பேர் பங்கேற்பு
ADDED : அக் 27, 2024 01:04 AM

மேல்மருவத்துார்:சித்தாமூர் ஒன்றியம், மேல்மருவத்துார் ஊராட்சியில் உள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நேற்று நடந்தது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து, நேற்று மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் பார்லிமென்ட் உறுப்பினர் செல்வம், செய்யூர் எம்.எல்.ஏ., பாபு, கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்றனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு பெற்ற இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 1,500 பேர் பங்கேற்றனர்.
இதில் தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கலெக்டர் அருண்ராஜ் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகை வேலு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.