/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
15,000 மெட்ரிக் டன் நெல் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
/
15,000 மெட்ரிக் டன் நெல் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
15,000 மெட்ரிக் டன் நெல் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
15,000 மெட்ரிக் டன் நெல் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஏப் 30, 2025 12:00 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், விவசாய நிலங்களில் சம்பா சாகுபடி நெல் பயிரிட்டனர்.
நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நெல் அறுவடை துவங்கி உள்ளது. அதன் பின், செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. பின், விவசாயிகளிடம் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு சாலை மார்க்கமாக இந்த நெல் மூட்டைகள், லாரிகள் வாயிலாக அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் புதுக்கோட்டை, நாமக்கல், சிவகங்கை, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு, ரயில்கள் வாயிலாக நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த பணி, கடந்த 1ம் தேதியிலிருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை, 15.000 மெட்ரிக் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.