/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரே நாளில் 16,000 பேர் கிண்டி பூங்கா புது மைல்கல்
/
ஒரே நாளில் 16,000 பேர் கிண்டி பூங்கா புது மைல்கல்
ADDED : ஜன 16, 2025 09:50 PM
வண்டலுார்:வண்டலுார் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில், காணும் பொங்கல் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்திருந்தது. குறிப்பாக, நுழைவு கட்டண டிக்கெட் பெற 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
வண்டலுார் பூங்காவை பொறுத்தவரை பாதுகாப்பு பணியில் 150 போலீசார், சென்னை, வேலுார், தர்மபுரி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த 115 வனத்துறையினர், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் 30,000 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
காணும் பொங்கலன்று 30,000த்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் 23,000 பார்வையாளர்கள் மட்டுமே வந்தனர். வண்டலுார் பூங்காவில், டிக்கெட் கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதே, பார்வையாளர்கள் குறைய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், கிண்டி பூங்காவில் ஒரே நாளில் 16,000 பேர் குவிந்தனர். இது கிண்டி பூங்கா வரலாற்றில் சாதனையாகவும் புது மைல் கல்லாகவும் மாறியது.